திமுகவில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் விலகிய நடிகை குஷ்பூ, இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்து கொண்டார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பு.கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 2010-ம் ஆண்டு நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க. பேச்சாளராகவும் வலம் வந்தார். இந்த நிலையில் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றிய கேள்விக்கு சர்ச்சை கருத்தை வெளியிட்டு எதிர்ப்புக்கு ஆளானார். இதன் மூலம் தி.மு.க. தலைவர்களுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க.வில் இருந்து விலகினார்.கடந்த பாராளுமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு ஒரு சில இடங்களில் மட்டும் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் உடல் நிலை குறைவை காரணம் காட்டி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து, அவர் கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இருப்பினும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று அவருக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில், நடிகை குஷ்பு ஜூன் மாதம் திடீரென்று தி.மு.க.வில் இருந
No comments:
Post a Comment