Wednesday, November 26, 2014

உ.பி.யில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம்

கன்னோஜ் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி 19 வயது இளம்பெண், கல்லூரியின் மூத்த கிளர்க் மற்றும் அவரது உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் குற்றவாளிகளால் மருத்து கல்லூரி வளாகத்தில் உள்ள வீட்டில் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கடந்த 23ம் தேதி போலீசில் தனது மகளை காணவில்லை என்று புகார் அளித்தார். பின்னர் இளம்பெண்ணின் செல்போன் எண்ணை கொண்டு, அவர் மருத்துவ கல்லூரியில் அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குற்றவாளிகள் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர். கடத்தல் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment