தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கொடிப்பாடி கிராமம் உண்டிஜாலு பகுதியை சேர்ந்தவர் ரத்னா (வயது 17, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10–ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2–ந் தேதி ரத்னா பள்ளிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, தனது மகள் காணாமல் போய் விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் ரத்னாவின் தாயார் புத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ரத்னாவை தேடி வந்தனர்.
Read more at http://ift.tt/1ATkmyP
Read more at http://ift.tt/1ATkmyP
No comments:
Post a Comment