இந்தி நடிகர் சல்மான் கான் 2002–ம் ஆண்டில் பாந்திரா பகுதியில் காரை வேகமாக ஓட்டி சென்றதில் சாலையோரம் படுத்து தூங்கியவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சாதாரண விபத்து வழக்கு பதிவு செய்து மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால், இது கொலை அல்லாத மரணத்தை விளைவிக்க கூடிய தீவிரமான குற்றம் என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கருதியது. இதனால் கடந்த ஆண்டு இந்த வழக்கு மும்பை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க கூடிய பிரிவுகளில் சல்மான் கான் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
http://ift.tt/1H5U7W3
http://ift.tt/1H5U7W3
No comments:
Post a Comment