Saturday, March 28, 2015

இந்தியாவின் 4-வது நேவிகேஷனல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இஸ்ரோ

1425 கிலோ எடையுள்ள இந்த IRNSS-1D செயற்கைக்கோள் PSLV-C27 ராக்கெட்டு மூலமாக ஏவப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். கடந்த 9-ந்தேதியே ஏவப்பட இருந்த இந்த செயற்கைகோள் டெலிமெட்ரி டிரான்ஸ்மிட்டரில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக இத்தனை நாட்கள் தாமதமாகியிருக்கிறது. மொத்தம் 7 செய்ற்கைகோள்கள் கொண்ட இந்த அமைப்பில் ஒவ்வொரு செயற்கைகோளும் ரூ.150 கோடி மதிப்பிலானவை. அதேபோல், அவற்றை ஏவுவதற்கு உதவும் PSLV-XL ராக்கெட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.130 கோடி மதிப்பிலானவை. ஏழு ராக்கெட்டுகள் கொண்ட மொத்த அமைப்பின் மதிப்பு ரூ.910 கோடியாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள செயற்கைகோள்கள் அனைத்தையும் ஏவ இஸ்ரோ திட்டமிடப்பட்டுள்ளது.

Read more at http://ift.tt/1CZaDrA

No comments:

Post a Comment