2005–ம் ஆண்டு தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் ஹிந்தால்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து குமாரமங்கலம் பிர்லா மீதும், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 21–ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கும்படி கோர்ட்டை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது. அப்போது இதுதொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றையும் கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
Read more at http://ift.tt/1v94dAy
Read more at http://ift.tt/1v94dAy
No comments:
Post a Comment