காஷ்மீர், ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் இன்று 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் 12 எம்.எல்.ஏ.க்கள் (7 மந்திரிகள்) உள்பட 123 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 10 லட்சத்து 81 ஆயிரம் வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர். 1,787 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. காலை ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையாக நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.
Read more at http://ift.tt/1r79qe3
Read more at http://ift.tt/1r79qe3
No comments:
Post a Comment