Friday, November 28, 2014

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்ததாக கூறப்பட்ட மும்பை திரும்பிய வாலிபரிடம் விசாரணை

ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசம் கொண்டு வந்து உள்ளனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இருப்பதாக கடந்த ஜூலையில் பரப்பரப்பு தகவல் வெளியாகியது. இவர்களில் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஏஜாஜ் பக்ருதீன் மஜ்ஜித் என்பவரின் மகன் ஆரிப் என்பதும், மற்ற 3 பேர் தானே நகரை சேர்ந்த தன்வீர் சேக், அமன் நைம், சகீன் பாரூக் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 20 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

http://ift.tt/1FzYYyt

No comments:

Post a Comment