Wednesday, November 26, 2014

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் பெயர்களை வெளியிட பரிசீலிப்போம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து

விசாரணையின் போது பீகார் கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் ஹரிஷ் சால்வே வாதிடுகையில், முட்கல் கமிட்டி இறுதி அறிக்கையில் குருநாத் மெய்யப்பன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அணியின் உரிமையாளரான என்.சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக கட்டாயம் இருக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியம் சட்டப்பூர்வமான அமைப்பு இல்லை. இது மக்களுக்கு தொடர்புடைய நிகழ்ச்சியில் பங்கேற்பதால் கண்டிப்பாக நீதிக்கு உட்பட வேண்டும். முட்கல் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்றுள்ள வீரர்களை பெயரை வெளியிட வேண்டும்’ என்று வற்புறுத்தினார்.

Read more at http://ift.tt/1xSE6QX

No comments:

Post a Comment