Friday, March 27, 2015

கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை இல்லை: மேற்கு வங்க அரசின் கோரிக்கை நிராகரிப்பு

மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டம் கங்னாப்பூரில் உள்ள ஒரு கான்வென்ட் பள்ளியில் கடந்த 14-ந் தேதி அன்று 4 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்து ரூ.12 லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்தது. அப்போது அங்கு இருந்த 71 வயது கன்னியாஸ்திரியை, அவர்களில் 3 பேர் கற்பழித்தனர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து உடனடியாக சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு, அந்த மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவிட்டார். பள்ளியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு, வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்குமாறு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சிபாரிசு செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read more at http://ift.tt/1H5U8cB

No comments:

Post a Comment