Wednesday, March 25, 2015

மத்திய பிரதேச கவர்னர் மகன் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு, ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்

சாய்லேஷ் யாதவ் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. போலீஸ் அதிகாரி விரேந்திர பகதூர் சிங் பேசுகையில், “மத்திய பிரதேசம் மாநிலம் கவர்னர் ராம் நரேஷ் யாதவ் அவர்களின் அரசுவீட்டில் இறந்த நிலையில் சாய்லேஷ் யாதவ் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் ‘வியாபம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர். இந்த ஊழலில் சாய்லேஷ் பெயரும் இடம்பெற்று இருந்தது. வியாபம் பணி நியமன முறைகேடு குறித்து மாநில விசேஷ அதிரடிப் படை விசாரணை நடத்தி வருகிறது.

Read more at http://ift.tt/1CPDBtM

No comments:

Post a Comment