உத்தரபிரதேச மாநில சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. உத்தரபிரதேசம் முழுவதும் 917 மையங்களில் நடைபெற்ற தேர்வை நான்கரை லட்சம் தேர்வர்கள் எழுதினர். காலை 9.30 மணிக்கு, முதல் ஷிப்ட் தேர்வு தொடங்க இருந்த நிலையில், 9.15 மணிக்கு திடீரென கேள்வித்தாள் ‘வாட்ஸ்அப்’ மூலம் ரகசியமாக வெளியானது. முதல் ஷிப்ட் தேர்வு நடந்து கொண்டிருந்தபோது, இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. அதிகாரிகள் இரு கேள்வித்தாள்களையும் ஒப்பிட்டு பார்த்து, இரண்டும் ஒன்றுதான் என்பதை உறுதி செய்தனர். இந்த வினாத்தாள், ரூ5 லட்சத்துக்கு விற்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment