Monday, January 26, 2015

'ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது' பிரதமர் மோடி பேச்சு

டெல்லியில் இந்திய - அமெரிக்க தொழில் அதிபர்களை பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சந்தித்து பேசினர். கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், அனைத்து மிகப்பெரிய திட்டங்களையும் பிரதமர் அலுவலகம் கண்காணிக்கும். இந்தியாவில் வணிகம் செய்ய சிறந்த சூழலை ஏற்படுத்தித்தர அரசு விரும்புகிறது. இந்தியாவில் தொழில் தொடங்க தடையாக உள்ள நடைமுறைகளை அரசு நீக்கும். ஆசிய நாடுகளிலேயே இந்தியாவின் வணிக சூழ்நிலை வலிமையானதாக உள்ளது. நாட்டின் பணவீக்கம் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது.


No comments:

Post a Comment