வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து பாகிஸ்தான் ராவல்பிண்டிக்கு சென்ற பாகிஸ்தான் விமானப்படை விமானம் ஒன்று எரிபொருள் நிரப்புவதற்காக லக்னோ விமான நிலையத்தில் தரை இறங்க விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். பின்னர் உரிய அனுமதிக்கு பிறகு விமானம் தரை இறங்க அதிகாரிகள் அனுமதித்தனர். இதையடுத்து எரிபொருள் நிரப்பிவிட்டு விமானம் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டு சென்றது. திடீரென பாகிஸ்தான் விமானம் தரை இறங்கியதால் விமான நிலையத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
No comments:
Post a Comment