இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வரும் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள், இந்த ஆண்டு குடியரசு தினத்தை புறக்கணிக்குமாறும், அன்றைய தினம் முழு அடைப்பு நடத்துமாறும் மணிப்பூர், அசாம் உள்ளிட்ட மாநில மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி மணிப்பூரில் நேற்று இரவு 9 மணியில் முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இதையொட்டி கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் பெரும்பாலான பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வாகன போக்குவரத்தும் குறைவான அளவிலேயே இருந்தது.
No comments:
Post a Comment