94 வயதான லக்ஷ்மண் சிறுநீரக தொற்று காரணமாக கடந்த சனிக்கிழமை மாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். லஷ்மணனின் பல முக்கிய உடல் உறுப்புகள் செயலிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 6.50 மணியளவில் அவர் மரணம் அடைந்தார் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment