Tuesday, November 25, 2014

கருப்பு பணம் வைத்திருப்பவர்களை காப்பாற்ற காங்கிரஸ், எதிர்க்கட்சிகள் முயற்சி: மத்திய அரசு

பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மந்திரி பிரகாஷ் ஜவதேவ்கர், இவ்விவகாரத்தில் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணியினை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. என்றார். "எங்களுடைய நடவடிக்கையின் காரணமாக சஞ்சலம் அடைந்துள்ளவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கருப்பு பணம் வைத்திருப்பவர்களை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்." என்று பேசிய பிரகாஷ் ஜவதேவ்கர், சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டும் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டு வருடத்திற்கு மேலாக கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கவில்லை, ஆனால் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்த இரண்டரை நாட்களிலே விசாரணை குழுவை அமைத்தது என்று குறிப்பிட்டார்.

Read more at http://ift.tt/15mBa4t

No comments:

Post a Comment