எனினும், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இன்றைய நிகழ்ச்சி நிரலில் இறுதியில் இடம்பெற்றிருந்த கருப்பு பணம், விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கையை கவனத்தில் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார். விதி எண் 56-ன் கீழ் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்க்கே, வீரப்ப மொய்லி, கமல் நாத் மற்றும் பிறர்தரப்பில், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முயன்றது நிறைவேற்ற முடியாது, இதுஒரு புதிய பிரச்சினை இல்லை என்றும் இவ்விவகாரம் ஏற்கனவே முந்தைய மக்களவையில் விவாதிக்கப்பட்டது. என்று சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். விவாதம் நடத்துவதற்க கேள்வி நேரத்தை சஸ்பெண்ட் செய்ய முடியாது என்றும் சுமித்ரா மகாஜன் தெரிவித்துவிட்டார்.
No comments:
Post a Comment