ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போர் புரிந்து வருகிறார்கள். அவர்கள் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்களது வசம் கொண்டு வந்து உள்ளனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 4 இளைஞர்கள் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து இருப்பதாக கடந்த ஜூலையில் பரப்பரப்பு தகவல் வெளியாகியது. இவர்களில் தானே மாவட்டம் கல்யாணை சேர்ந்த ஏஜாஜ் பக்ருதீன் மஜ்ஜித் என்பவரின் மகன் ஆரிப் என்பதும், மற்ற 3 பேர் தானே நகரை சேர்ந்த தன்வீர் சேக், அமன் நைம், சகீன் பாரூக் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் 20 வயது பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.
Read more at http://ift.tt/1FzYYyt
Read more at http://ift.tt/1FzYYyt
No comments:
Post a Comment