பீகாரின் மேற்கு பகுதியில் உள்ள அர்ராக் மாவட்டத்தில் கோர்ட்டில் இன்று காலை வெடிகுண்டு வெடித்தது. வெடிகுண்டை கொண்டுவந்த பெண்ணும் வெடித்ததில் பலியாகினார் என்று போலீஸ் தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பில் போலீசார் ஒருவரும் உயிரிழந்தார். 14 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பு நடந்த இடத்தை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டை கோர்ட்டிற்கு கொண்டு வந்தபெண்ணிற்கு குறைந்த வயதே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவரவில்லை. சம்பவம் தொடர்பான முழு தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.
http://ift.tt/1EAhKF7
http://ift.tt/1EAhKF7
No comments:
Post a Comment